வயதை குறைக்க இப்படி டயட்டா? இரவு உணவை காலை 11 மணிக்கே முடிக்கும் தொழிலதிபர்!

United States of America
By Sumathi Jul 14, 2023 07:40 AM GMT
Report

வயதை குறைக்க தொழிலதிபர் ஒருவர் ஆச்சரியமான டயட்டை ஃபாலோ செய்து வருகிறார்.

வயது குறைப்பு 

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரையன் ஜான்சன். இவர் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை செலவிடுகிறார்.

வயதை குறைக்க இப்படி டயட்டா? இரவு உணவை காலை 11 மணிக்கே முடிக்கும் தொழிலதிபர்! | American Techie Last Meal At 11 Am To Look Young

ஆண்டுக்கு 16 கோடி. இவரது வயது 45. தன்னுடைய உயிரியல் வயதை ஆச்சர்யமான முறையில் குறைப்பதன் ஒரு பகுதியாக, பிரையான் தனது இறுதி இரவு உணவை தினமும் காலை 11 மணிக்கு முடித்துக் கொள்கிறார்.

உணவு முறை

இதற்காக தினமும் மூன்று வேளை உணவாக 1977 கலோரிகளை உட்கொள்கிறார். இதை வைத்து பார்க்கும்போது, பிரையான் இண்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் (இடைபட்ட உண்ணாவிரதம்) அல்லது குறிப்பிட்ட கால அளவிற்குள் சாப்பிடுவது போன்ற ஏதோ ஒன்றை பின்பற்றுகிறார் என தெரிகிறது.

வயதை குறைக்க இப்படி டயட்டா? இரவு உணவை காலை 11 மணிக்கே முடிக்கும் தொழிலதிபர்! | American Techie Last Meal At 11 Am To Look Young

இதனால் அவரது செரிமான அமைப்பிற்கு நீண்ட நேரம் ஓய்வு கிடைக்கிறது. இதனால், அவரது நுறையீரலின் திறன் 18 வயது இளைஞருடையது போலவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், தோல் இறுகி, 28 வயது இளைஞர் போல் தெரிகிறார்.