என் வயது தான் 45; ஆனால் உடலுக்கு 22 - இளமையாக இருக்க மாதம் ரூ.1 கோடி செலவு
தொழிலதிபர் ஒருவர் இளமையாக இருக்க மாதம் ரூ.1 கோடி செலவு செய்கிறார்.
என்றும் இளமை
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரையன் ஜான்சன். இவர் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை செலவிடுகிறார். ஆண்டுக்கு 16 கோடி. இவரது வயது 45.
ஆனால், உடல் உறுப்புகள் தோலின் ஆரோக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் வயது 28 என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவரின் நுரையீரல் 18 வயதைப் போலவும், இதயத்தின் வயதோ 37 போன்று ஆரோக்கியமாக இருக்கிறதாம்.
1 கோடி செலவு
இதனைத் தொடர்ந்து, என்றும் 18 வயதாக இளைஞனாக இருக்க வேண்டும் என்று முற்படுகிறார். காலை 5 மணிக்கு எழுந்து, காலை உணவை 6 மணிக்கு எடுத்துக்கொள்கிறார். உணவில் அசைவ உணவைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் காய்கறி பழங்களை மட்டுமே உட்கொள்கிறார்.
தினசரி 1977 கலோரி சத்துக்களைக் கொண்ட உணவை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். ஒரு கலோரி கூடுதலாகவோ,குறைவாகவோ எடுப்பதில்லையாம்.
மேலும், அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் சிட் அப்கள் மேற்கொள்வதற்கு இணையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். தினசரி பிரத்யேகமாக பரிந்துரைக்கப்பட்ட 54 சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்.