“அடுத்த புத்தகத்தில் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என எழுதுங்கள் ” - முதலமைச்சர் குறித்து ராகுல் காந்தி பேச்சு

rahulgandhispeechbooklaunch ungaliloruvanbooklaunchmkstalin
By Swetha Subash Feb 28, 2022 02:12 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி அரங்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகை தந்த நிலையில், பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

இந்த விழாவானது கனிமொழி எம்.பி அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில், கேரள முதல்வர் பினராயி விஜயன்,

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“அடுத்த புத்தகத்தில் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என எழுதுங்கள் ” - முதலமைச்சர் குறித்து ராகுல் காந்தி பேச்சு | Rahul Gandhi Speech In Mk Stalin Book Launch

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்; அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் கொண்டது.

நாற்று ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்; 69 வயது என்று சொன்னேன்.

அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒத்துக்கொண்டார். நிச்சயமாக அடுத்த புத்தகத்தில் மு.க.ஸ்டாலின் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்று எழுத வேண்டும்.

தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது, இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, என் அடி மனதிலிருந்து சொல்கிறேன்.

நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வரும்போது தமிழன் என பத்திரிகையாளர்களிடம் கூறினேன்; பிறகு ஏன் அப்படி பேசினேன் என யோசித்தேன், எனது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது,

நான் தமிழன் என்று சொல்லி கொள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. பிரதமர் பொருள்புரியாமல் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார்; தமிழ் மக்களின் குரலை புரிந்துகொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி சொல்வீர்கள்?

நீட் விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள்மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள்.

3,000 ஆண்டுகளாக தமிழ் மக்களின் மீது யாரும் எதனையும் திணிக்க முடிந்ததில்லை; தமிழ் மக்களிடம் அன்போடும் அக்கறையோடும் பேசினால், அவர்களிடம் இருந்து எதையும் பெறலாம்” என பேசினார்.