டி.ஆர்.பாலு எதிர்கொள்ளும் சவால்கள்..! ஸ்ரீபெரும்புதூரில் களம் என்ன சொல்கிறது..?

Naam tamilar kachchi Tamil nadu ADMK DMK Lok Sabha Election 2024
By Karthick Apr 08, 2024 11:35 PM GMT
Report

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்களவை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்

தமிழகத்தின் 5-வது மக்களவை தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் ஜி.பிரேம் குமார்,பாஜக கூட்டணியில் சார்பில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் வி.ரவிச்சந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

sriperumbudur-will-tr-balu-win-again-election

இதில் கடந்த 2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஆர்.பாலு சுமார் 5,07,95 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஸ்ரீபெரும்புதூர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஸ்ரீபெரும்புதூர்

இப்போது அதிமுக - பாஜக தனி தனி கூட்டணியாக இருக்கும் நிலையில், அந்த 2 கூட்டணியும் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளையே குறிவைத்துள்ளது. திமுகவின் முன்னணி தலைவர், பரிட்சயமான முகம், தேசிய அரசியலில் ஆளுமை போன்ற சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

களம் யாருக்கு..?

ஆனால், அதே நேரத்தில் தொகுதியுடன் தீவிர தொடர்பு இல்லாமலே அவர் இருந்ததாக லோக்கல் மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இருப்பினும், திமுகவின் 3 ஆண்டு ஆட்சி சாதனைகள், மத்திய பாஜக ஆட்சி மீதான அதிருப்தி போன்றவை திமுகவிற்கு கை கொடுக்கலாம்.

sriperumbudur-will-tr-balu-win-again-election

தமிழகம் முழுவதுமே கையிலெடுத்துள்ள பொதுவான முன்னெடுப்பையே அதிமுக இந்த தொகுதியிலும் கையாளுகிறது. நீட் விவகாரம், மழை பாதிப்பு பிரச்சனை, போதை விவகாரம் போன்றவற்றையே அதிமுக முன்னெடுத்துள்ளது.

sriperumbudur-will-tr-balu-win-again-election

திராவிட கட்சிகள் இல்லாத மாற்று கட்சி வேண்டும் என கூறி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக, 10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சி பெருமைகளையும், திமுகவின் பின்னடைவுகளை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறது.

sriperumbudur-will-tr-balu-win-again-election

போட்டி, மூன்ற பிரதான கட்சிகளுக்கு இடையே என்று பேசும் பட்சத்திலும், வாக்கு வங்கியில் வளர்ந்து வரும் சீமானின் நாம் தமிழர் மாற்றுக்கட்சியாக தாங்களே மாநில கட்சியாக நிற்பதாக மாநில - மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.