விக்னேஷ் சிவன் லக்கிலாம் கிடையாது - ஓப்பனா சொன்ன சீரியல் நடிகை ஸ்ரீநிதி
சீரியல் நடிகை ஸ்ரீநிதி, விக்கி - நயன் ஜோடி குறித்து பேசியுள்ள கருத்து வைரலாக பரவி வருகிறது.
விக்கி - நயன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.
சீரியல் நடிகை ஸ்ரீநிதி
இதையடுத்து ஸ்பெயினில் உள்ள வேலன்ஸியா நகரத்திற்கு சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தினர். அதே வேளையில் இருவரும் தங்களது திரையுலக வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே சீரியல் நடிகை ஸ்ரீநிதி விக்கி நயன் ஜோடி குறித்து கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது. நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசை என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். வலிமை குறித்து பேசி நெட்டிசன்களிடம் சிக்கினார்.
நல்லா பார்த்துப்பார்
இவ்வாறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்தான் ஸ்ரீநிதி. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ல பேட்டி ஒன்றில், நயன்தாரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது.
தமிழ் பையன் நயனுக்கு கிடைத்திருக்கிறார். நல்லா பார்த்துப்பார். அதனால் நயன்தாரா லக்கி என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.