சவுதியில் தஞ்சம் அடையும் இலங்கை அதிபர் : வெளியான பரபரப்பு தகவல்

Gotabaya Rajapaksa Sri Lankan political crisis
By Irumporai Jul 14, 2022 08:12 AM GMT
Report

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போராட்டம்

இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சவுதியில் தஞ்சம் அடையும் இலங்கை அதிபர் : வெளியான பரபரப்பு தகவல் | Srilankan Gotabaya Rajapaksa Saudi Arabia

இதற்கிடையே, இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறியதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவில் தஞ்சம் அடைந்த கோத்தபய

நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது.

சவுதியில் தஞ்சம் அடையும் இலங்கை அதிபர் : வெளியான பரபரப்பு தகவல் | Srilankan Gotabaya Rajapaksa Saudi Arabia

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.

சுவுதியில் தஞ்சம்

மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.