பட்டினியில் கடல் நீரை குடித்தோம்... இலங்கை தம்பதி உருக்கம்!

Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Food Crisis Sri Lanka Violence 2022
By Sumathi Jun 27, 2022 08:44 PM GMT
Report

இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர்.

 பொருளாதார நெருக்கடி

இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பட்டினியில் கடல் நீரை குடித்தோம்... இலங்கை தம்பதி உருக்கம்! | Srilankan Couple Felt Bad

இன்று காலையில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரை பகுதியில் வயது வயோதிக தம்பதி, கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 வயோதிக தம்பதி

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் மரைன் போலீஸ் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவலர்கள் கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் இருந்த இருவரை மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அவசர ஊர்தி அழைக்கப்பட்டது.

sri lanka

ஆனால் தம்பதி இருவரும் கடற்கரைக்கு அருகே இருந்ததால் அவசர வாகனத்தால் அந்த பகுதிக்கு வர முடியவில்லை. இதையடுத்து மரைன் ஆய்வாளர் கனகராஜ், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினார்.

முதலுதவி

அதன்பேரில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பல் கோதண்டராமர் கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டது. அதில் இருந்த வீரர்கள் இலங்கை தம்பதியை மீட்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள

இரட்டை தாளை கடற்கரைப்பகுதியில் வைத்து இருவரையும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தம்பதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அகதிகள்  முகாம்

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடைக்கலம் கோரி வந்தவர்கள், இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் (82) மற்றும் அவருடன் இருந்தது அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரிய வந்தது.

மன்னாரில் கூலி வேலை செய்து வந்த தனக்கு 3 பெண்கள், ஒரு மகன் இருப்பதாக சிவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வயோதிக நிலையில்,

 தனுஷ்கோடி

தாய்நாட்டில் வாழ முடியாததால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மகனுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும் இந்த வயோதிக தம்பதி கூறினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் மன்னார் பேசாலையில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி வரை வந்துள்ளனர்.

ஓடும் காரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!