குரங்கால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கிய சம்பவம் -இலங்கை நடந்தது என்ன?
இலங்கையில் குரங்கு செய்த சேட்டையால் நேற்று நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டுள்ளது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இலங்கை
இலங்கை கொழும்புவில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 11.30 மணியளவில் நேற்று குரங்கு ஒன்று நுழைந்தது. இதனால் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. திடீர் மின்சார தடையால் மருத்துவமனைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் தடைபெற்று மக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர்.
முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில், இதுகுறித்து எரிசக்தித்துறை அமைச்சர் உதயங்க ஹேமபால செய்தியாளர்களைச் சந்தித்தார்.
குரங்கு சேட்டை
அப்போது பேசியவர் ,’’ மின்சார தடைக்கு பானாந்துறை மின்நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம்.இதனால் தான் கொழும்பு புறநகர்ப் பகுதியான பானாந்துறை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்தப் பிரச்சனையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது என்று கூறினார்.
மேலும் சில பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகக் கூறியவர்,’’பல இடங்களில் மின்தடை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் மின் விநியோகம் சீராகும் எனத் தெரிவித்தார்.