இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம் : நாடாளுமன்றத்தை கூட்ட இலங்கை பிரதமர் கோரிக்கை

Sri Lanka Government
By Irumporai Jul 09, 2022 09:59 AM GMT
Report

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெடித்த போரட்டம்

ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.

கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வருகின்றனர்.மேலும்,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும்,போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்பி ரஜிதா சேனரத்னா படுகாயமடைந்துள்ளார்

தப்பியோடிய அதிபர்

எனவும் தகவல் வெளியாகியுள்ளன. எனினும்,தற்போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்நுழைந்து அதனை கைப்பற்றியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வெடித்த  மக்கள் போராட்டம் : நாடாளுமன்றத்தை கூட்ட இலங்கை பிரதமர் கோரிக்கை | Srilanka Emergency Meeting Prime Minister Ranils

உளவுத்துறை எச்சரித்ததையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,நேற்று இரவே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.அதே சமயம்,அவர் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்,இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசிக்க,நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாநாயகருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.  

கோத்த பய ராஜபக்சே மாளிகை நீச்சல் குளத்தில் குதித்து விளையாடிய போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ