கோத்த பய ராஜபக்சே தப்பியோட்டம் - மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகை வீச்சு - இலங்கையில் பரபரப்பு

Gotabaya Rajapaksa Sri Lanka
By Nandhini Jul 09, 2022 07:46 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கை பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். அந்நாட்டுக்கு உதவிடும் வகையில் எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும்,கடந்த மாதம் அதே தொகையும் இந்தியா கடனாக வழங்கியது. ஏற்கனவே, பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. கடந்த 21-ந் தேதி 40 ஆயிரம் டீசல் இந்தியா வழங்கியது.

ஊரடங்கு உத்தரவு

கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இலங்கையில் நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.

வலுக்கும் போராட்டம்

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்றிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

இந்நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதில் ஏராளமானோருக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

sri lanka

கோத்த பய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட ஆயிரக்கணக்கானோர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதையடுத்து தப்பியோடியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

தேங்கிய மழைநீரில் நனையாமல் நடந்தவரின் திறமையை பார்த்து வியந்துபோன ஆனந்த் மஹிந்திரா - வைரலாகும் வீடியோ