தேங்கிய மழைநீரில் நனையாமல் நடந்தவரின் திறமையை பார்த்து வியந்துபோன ஆனந்த் மஹிந்திரா - வைரலாகும் வீடியோ
1 ரூபாய் இட்லி பாட்டி
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார். இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.
பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர். மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.
வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா டுவிட்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தேங்கிய மழை நீரில் ஒருவர் நனையாமல் உட்காரும் சேரில் நூலைக் கட்டி அதன் மேல் சாதூர்யமாக நடந்துள்ளார். சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோவைப் பார்த்து வியந்து போன ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டு, அதில் பழமொழி சொல்வது போல்: தேவையே கண்டுபிடிப்பின் தாய்...என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
?? As the saying goes: Necessity is the mother of invention… pic.twitter.com/VjyD2LzgAR
— anand mahindra (@anandmahindra) July 8, 2022