இலங்கையில் கடலில் குளித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்
இலங்கையில் கடலில் குளிக்க சென்ற நபர் பிணமாக திரும்பிய சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் குளித்த போது நபர் ஒருவர் காணமல் போன நிலையில் பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
இதனிடையே நேற்று காலை களுதாவளைக் கடற்கரையில் இந்த நபரின் பிணம் கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை மதிய உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவர் வியாழக்கிழமை இரவு வரைக்கும் வீடு திரும்பவில்லை .