இலங்கை வீரர் குணதிலகா இப்படியா அவுட் ஆகணும்! மிகவும் அரிதான சம்பவம்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆன்டிகுவாவில் நடந்த இப்போட்டியில் இலங்கை வீரரான குணதிலகாவின் ரன் அவுட் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது, இதன் தொடக்க வீரர்களாக கருணாரத்னே, குணதிலகா களமிறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது 22வது ஓவரில் தான் குணதிலகா அவுட் ஆன நிகழ்வு நடந்தது, இந்த ஓவரை பொலார்ட் வீசினார். முதல் பந்து பவுன்ஸராக, அடுத்த பந்தை வேகமாக அடித்து ரன் எடுக்க குணதிலகா முயன்றார். ஆனால், பொலார்ட் ஓடிவரவே பின்வாங்கி கீரீஸ் பகுதிக்கு குணதிலகா திரும்பிச் சென்றார்.
அப்போது குணதிலகா கால்களுக்கு இடையே சிக்கிய பந்தை அவர் தட்டிவிட்டார். ரன்அவுட் செய்யும் வாய்ப்பையும், பீல்டிங் செய்யவிடாமல் தடுத்துவிட்டார் எனக் கூறி அவுட் அளிக்க பொலார்ட் நடுவரிடம் அப்பீல் செய்தார்.
களநடுவர் மூன்றாவது நடுவருக்கு பரிந்துரைத்தார்.
மூன்றாவது நடுவர், அம்பயர்ஸ் கால் அளிக்கவே, நடுவர் குணதிலகாவுக்கு அவுட் வழங்கினார்.
"obstructing the field" முறையில் இலங்கை வீரர் குணதிலகா 55 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil