இலங்கையில் அதிவேகமாக பரவக்கூடிய வைரஸ் கண்டுபிடிப்பு
இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவதுறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புதிய வகை வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறிவித்திருந்தது. இருந்த போதிலும் இது தொடர்பில் சுகாதார பிரிவினர் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழுவினால் நேற்று இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக கண்டறிப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil