இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைக்க தான் இந்த தரைப்பாலம் - பேராயர் பகீர் குற்றச்சாட்டு!

Sri Lanka India
By Sumathi Jun 26, 2024 04:50 AM GMT
Report

கொழும்பு பேராயர் இந்தியா குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியா-இலங்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் முடிவடைந்துவிட்டன.

india - srilanka

அடுத்ததாக முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேகாலை - ருவன்வெல்லவில் செய்தியாளர்களிடம் பேசிய கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித், தென்னிந்தியாவிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கு எங்கள் வரலாறு முழுவதும் ஆதாரங்கள் உள்ளன.

நயாகரா நீர்வீழ்ச்சியை காண புதிய காட்சித்தளம் - அசந்து போன சுற்றுலா பயணிகள்!

நயாகரா நீர்வீழ்ச்சியை காண புதிய காட்சித்தளம் - அசந்து போன சுற்றுலா பயணிகள்!

சுதந்திரத்திற்கு பாதிப்பு 

ஒவ்வொரு முறையும் சிங்கள மன்னர்கள் படைதிரட்டி போர்புரிந்து தென்னிந்திய மன்னர்களிடமிருந்து நிலங்களை விடுவிக்கவேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் தரைப்பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது.

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைக்க தான் இந்த தரைப்பாலம் - பேராயர் பகீர் குற்றச்சாட்டு! | Srilanka Connectivity Project With India

இதன்காரணமாக இலங்கை தமிழ்நாட்டின் வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவுகள் நன்மையானவையா தீமையானவையா என ஆராயாமல் அவை அனைத்தையும் நிறைவேற்றும் உறுதிப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளது. எங்களுக்கு நன்மையளிக்காத விடயத்தை நாங்கள் செய்யக்கூடாது.

இது குறித்து அவதானமாகயிருக்க வேண்டும், இல்லாவிட்டால் தற்போது காணப்படும் நிலைமையை விட இன்னமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் எங்கள் இறைமை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் செய்ய கூடாது எனத் தெரிவித்துள்ளார்.