மற்ற வீரர்களிடம் மரியாதை - ஹர்திக் கேப்டனாகாத காரணமே அது தான்!! முன்னாள் வீரர் விமர்சனம்
ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
ஏன் ஹர்திக் இல்லை?
ஆனால், உலகக்கோப்பையின் போது துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என பெரிதாக நம்பப்பட்டது. ஆனால், அவருக்கு துணை கேப்டன் பதவி கூட வழங்கபடவில்லை.
இது பல்வேறு கேள்விகளை உண்டாக்கியது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அணி தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் பேசும் போது, ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தில் சிக்குவதாலேயே அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார் என கூறினார்கள்.
இருப்பினும், பல வகையான விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தான் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸில் அர்னால்ட் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்காதது இதற்கு வழி வகுத்ததாக தெரிவித்திருக்கிறார். அணியின் கேப்டனாக இருப்பவர், அணி வீரர்களை ஒருங்கிணைத்து சரியான வழியில் அணியை வழிநடத்த வேண்டும். அதில் ஹர்திக் தவறிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
