அரசியல் தொடர்பால்...குறுக்கு வழியில் பயிற்சியாளராகி விட்டார் கம்பீர் - முன்னாள் வீரர் ஆதங்கம்!
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைக்கின்றன.
தலைமை பயிற்சியாளர்
டிராவிட்டை அடுத்து தற்போது கம்பீர் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் மீது பல தரப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், கம்பீர் நியமிக்கப்பட்டதற்கு பல விமர்சனங்களும் உள்ளது.
இதில், அரசியல் தலையீடும் இருப்பதாகவே பலரும் கூறினார்கள். காரணம், பாஜகவில் எம்.பி'யாக இருந்தார் கம்பீர். ஆனால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமானதே, அவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்க வழிவகை செய்ததாகவும் கூறுகிறார்கள்.
அரசியல்
இந்த நிலையில், தான் கம்பீர் குறுக்கு வழியில் அணியின் பயிற்சியாளராகி விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். சொகைல் தன்வீர் இது தொடர்பாக பேசும் போது, விவிஎஸ் லக்ஷ்மணன் தான் அணியின் பயிற்சியாளராகி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
அதாவது, இந்தியா பி அணிக்கு பலமுறை பயிற்சியாளராக சிறப்பான பணியை செய்தவராக இருக்கும் லக்ஷ்மணன் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் தன்னை மெருகேற்றி கொண்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டுகிறார் தன்வீர்.
ஆனால் அதே நேரத்தில், கம்பீர் அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பயிற்சியாளராக வந்து அமர்ந்து விட்டார் என குற்றம்சாட்டு இருக்கிறார்.