பயிற்சியாளரான கம்பீர் - போட்டியாக மற்றொரு அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் டிராவிட்!!
தற்போதுள்ள 20-20 ரசிகர்களுக்கு டெஸ்ட் உலகில் யாராலும் அசைக்கமுடியாத "The wall" என்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ராகுல் டிராவிட்டின் மாஸ்டர் கிளாஸ் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1996 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடியவர் தனது கிரிக்கெட் வாழ்வில் மொத்தமாக 24,177 வாரி குவித்திருக்கிறார். 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற டிராவிட், 2021-ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
'
அவரின் தலைமையின் கீழ் தான், இந்தியா 2024-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கொண்டாட்டத்துடனே டிராவிட் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டது.
கிரிக்கெட் விளையாடிய போது, அவரால் உச்சிமுகராப்படாத விஷயமாகவே இருந்த உலகக்கோப்பையை வென்ற ஆர்பரிப்பை கத்தி கூச்சலிட்டு வெளிப்படுத்தினார் டிராவிட்.
அவர் அடுத்து என்ன பணியை எடுப்பார் என்ற கேள்விகள் இருந்த நிலையில், மீண்டும் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக களமிறங்குகிறார் டிராவிட் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியில் இருந்த டிராவிட் தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் கிடைக்கிறது.
அணி நிர்வாகம் மற்றும் டிராவிட் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார்களாம். முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் டிராவிட் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
