என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.. சுப்மன் கில் துணை கேப்டனா? சீக்கா ஆவேசம்!
சுப்மன் கில் கில்லுக்கு துணை கேப்டன் வழங்கியது குறித்து சீக்கா ஆவேசம் அடைந்துள்ளார்.
சுப்மன் கில்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்.19 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இதற்கான இந்திய அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை ஜஸ்பிரிட் பும்ரா நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சுப்மன் கில் லுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடந்த போட்டியில் அவரது ஆட்டம் மோசமாகவே இருந்து வருகிறது என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சும்பன் கில்லுக்கு துணை கேப்டன் வழங்கியது குறித்து முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசம் அடைந்துள்ளார்.
சீக்கா ஆவேசம்
சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.. ஒன்னுமே புரில எனக்கு.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவே தர மாட்டிக்கிறீங்களே என ஸ்ரீகாந்த் கடுமையான விமர்த்தனத்தை முன்வைத்துள்ளார்.