Friday, Jun 27, 2025

ஸ்ரீதேவியை திருமணம் செஞ்சிக்க அவரின் தாயாரே கேட்டார் - பிரபல ஹீரோ ஓபன் டாக்!

Sridevi Marriage Tamil Actress
By Karthick a year ago
Report

நடிகை ஸ்ரீதேவியின் தாயார் தன்னிடம் திருமணம் விஷயம் குறித்து பேசியதாக நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி

ஒரே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படத்துறையிலும் ஈடு இணையற்ற நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரீதேவி. அழகு மட்டுமின்றி, நடிப்பு திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திய ஸ்ரீதேவி பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

Actress Sridevi

மொத்தமாக 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி 74 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ரஜினி,கமல் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, கடந்த 1996ம் ஆண்டு பிரபல இந்த தயாரிப்பாளர் போனி கப்பூரை திருமணம் செய்து கொண்டார்.

Actress Sridevi with boney kapoor

கடந்த 2018ம் ஆண்டு தனது 54ம் வயதில் மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்தார். அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலிலும் இன்றும் ஸ்ரீதேவி குறித்து பேச்சுக்களை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாரா ஸ்ரீதேவி..?பாலிவுட்டின் அடுத்த சர்ச்சை

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாரா ஸ்ரீதேவி..?பாலிவுட்டின் அடுத்த சர்ச்சை

திருமணம்...

அவரை குறித்து பிரபல ஹீரோ ஒருவர் பேசிய கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 90களில் தென்னிந்திய திரையில் முன்னணி நாயகனாக வளம் வந்த ஜேடி சக்கரவர்த்தி தான் அவர். அவர் கூறும் போது, "அந்த நேரத்தில், நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தேன்.

ஒரு நாள் குலாபி (1995) என்ற படத்தின் ஷூட்டிங் போது, இணைந்து நடித்த மகேஸ்வரி ஸ்ரீதேவியின் வீட்டிற்கு மத்திய உணவிற்கு அழைத்தார். ஸ்ரீதேவி அப்போது வீட்டில் இல்லை.

Actress Sridevi

நாங்கள் அங்கு சென்ற போது, ஸ்ரீதேவியின் தாயார் என் மகளை திருமணம் செய்துகொள்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியை தந்தது என்று கூறினார்.