திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாரா ஸ்ரீதேவி..?பாலிவுட்டின் அடுத்த சர்ச்சை
நடிகை ஸ்ரீதேவியை குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஸ்ரீதேவி
ஒரே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படத்துறையிலும் ஈடு இணையற்ற நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரீதேவி. அழகு மட்டுமின்றி, நடிப்பு திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திய ஸ்ரீதேவி பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

மொத்தமாக 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி 74 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ரஜினி,கமல் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, கடந்த 1996ம் ஆண்டு பிரபல இந்த தயாரிப்பாளர் போனி கப்பூரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2018ம் ஆண்டு தனது 54ம் வயதில் மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்தார். அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வரை ஸ்ரீதேவி மரணம் குறித்தும் பல சர்ச்சைகள் நீடித்து கொண்டே தான் இருக்கின்றன.
திருமணத்திற்கு முன்பே
அப்படிதான் தற்போது ஒரு சர்ச்சை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதாவது திருமணத்திற்கு முன்பே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாகி விட்டதாகவும் அதன் பிறகே அவருக்கும் போனி கபூருக்கு திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.

ஆனால், ,முன்னரே அளித்த பேட்டி ஒன்றில் இதனை முழுமையாக மறுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். அவர் இது குறித்து பேசும் போது, ஜூன் மாதமே எங்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால், ஜனவரி மாதம் தான் அதனை வெளியே அறிவித்தோம் என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil