சினிமா'ல என்ன...அப்படி பண்ணாங்க - டக்கு'னு அழுதுடுவேன் - வேதனையை பகிர்ந்த அபிராமி

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை அபிராமி தன்னுடைய திரைத்துறை அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை அபிராமி
தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான "வானவில்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார்.
தமிழை கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு பட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த அபிராமி, 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைஉலகில் இருந்து ஒதுங்கினார். இவர்கள் அண்மையில் கல்கி என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
சினிமா'ல அந்த மாதிரி
பேட்டி ஒன்றில் அவர் சினிமாவில் அனுபவித்த உருவக்கேலியை குறித்து மனந்திறந்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியது வருமாறு, உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள்.
நீ மிகவும் உயரமாக இருக்கிறாய். அதனால் நிறைய படவாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கிறது" என்றனர். மேலும் எனது தாடை நீளமாக இருப்பதாக கேலி செய்தனர்.
சிறுவயதில் தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக காரணமாக இருக்கலாம். எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது. சட்டென்று கண்ணீர் வந்து விடும். சினிமா துறையில் எனக்கு கஷ்டம் தரக்கூடிய சில விஷயங்கள் நடந்துள்ளது.