ஸ்ரீதேவி மரண விவகாரம்: சிக்கிய பெண் பிரபல யூடியூபர் - சிபிஐ வழக்கு பதிவு!
ஸ்ரீதேவி மரணம் அடைந்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி மரணம்
நடிகை ஸ்ரீதேவி 2018ல் துபாயில் உயிரிழந்தார். ஸ்ரீதேவி மரணம் இயற்கையானதா? அல்லது மர்மம் எதுவும் உள்ளதா? என பல விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவியின் மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு,
துபாயில் உள்ள தனது ஹோட்டல் அறையில் ஸ்ரீதேவி குளியல் அறையில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. அதன்பின், பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் உணவு பழக்கமும் அவர் உப்பு எடுத்துக் கொள்வதை தவிர்த்ததும் தான் மரணத்திற்கு முக்கிய காரணம் என கூறியிருந்தார்.
சி.பி.ஐ. விசாரணை
இந்நிலையில், பிரபல யூடியூபர் பின்னிட்டி என்பவர் இரண்டு அரசுகளும் ஸ்ரீதேவி மரண மர்மங்களை மூடி மறைக்கின்றனர். தான் சொந்தமாக விசாரணை நடத்தி, இதை கண்டுபிடித்ததாக கூறினார்.
பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் எழுதியதாக சில கடிதங்களையும், சுப்ரீம் கோர்ட்டு ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரக ஆவணங்கள் என்ற பெயரில் சில ஆவணங்களையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்துக்கு மும்பை வக்கீல் சாந்தினி ஷா என்பவர் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவை போலியானவை என்று தெரிய வந்த நிலையில், யூடியூபர் பின்னிட்டி அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பதில் அளித்துள்ள யூடியூபர் பின்னிட்டி தன்னுடைய தரப்பு அறிக்கை எதையுமே சிபிஐ பதிவு செய்யாமல் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.