காதலியின் நாய்க்கு பாலியல் தொல்லை - முன்னாள் பெண் எம்பி புகார்!
நாயை பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கியதாக முன்னாள் எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலியல் தொல்லை
இலங்கை முன்னாள் எம்.பி ஆஷு மாரசிங்க. இவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தார். இந்நிலையில், அவரது காதலியின் செல்ல நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்காவின் காதலி ஆதர்ஷா கரந்தனா ஆகிய இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சை புகார்
ஆனால், ஆஷூ மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், மறுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து பேசிய ஹிருணிகா பிரேமசந்திர, நாய்க்குட்டிக்கு பதிலாக ஒரு வயதேயான சிறுமியோ அல்லது சிறுவனோ இருந்திருந்தால், அவர்களாலும் பேசியிருக்க முடியாது. அந்த குழந்தைகளுக்கு தெரியாதல்லவா?
இந்த நாய் குட்டிக்கும் ஒரு வயது. ஒரு வயதான குழந்தையாக இருந்திருந்தால், இந்த நபர் செய்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதிலுள்ள விஷயத்தை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அவர் சாதாரண நபர் கிடையாது. ஜனாதிபதியின் ஆலோசகர். இந்த நபருக்கு தூதுவர் பதவி வழங்கி வெளிநாட்டிற்கு அனுப்ப ஜனாதிபதி முயற்சிக்கின்றாராம் எனத் தெரிவித்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil