அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் துன்புறுதல் செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்த் ஆகிய நால்வறையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஏற்கெனவே கைதாகியுள்ள சதீஷ் குமார் என்பவரின் நண்பரான பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்பவரை சி.பி.ஐ. போலீசார், பொள்ளாச்சியில் வைத்து தற்போது கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த பாலியல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒன்பதாவதாக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil