3 நாட்கள் பயணமாக திடீரென இந்தியா வரும் இலங்கை அதிபர் - என்ன காரனம்?
இலங்கை அதிபர் மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இலங்கை அதிபர்
இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயகா பதவியேற்றதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து அதிபர் மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கவுள்ளார்.
இந்தியா பயணம்
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, பிராந்திய அளவிலான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் நடைபெற உள்ள தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிக்கும், புத்த கயாவுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்திய நிலையில்,
இலங்கை அதிபரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.