இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை - குடும்பத்தின் முன் கொடூரம்!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தம்மிக்க நிரோஷனா
இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார்.
அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் தற்போது 41 வயதாகும் இவர் இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார்.
தீவிர விசாரணை
அங்கு, தமது வீட்டு முன்பாக தனியாக தம்மிக்க நிரோஷன் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார்.
Former U-19 Cricketer Dhammika Niroshan, also known as 'Jonty' (41) shot dead in front of his residence in the area of Kandewatte in Ambalangoda last night says Police Media Spokesperson #LKA pic.twitter.com/agNmrhXa6u
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) July 17, 2024
தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்தான் துபாயில் இருந்து நிரோஷன் இலங்கை திரும்பியதாகவும் துபாயில் ஏதேனும் சிக்கலில் சிக்கி இருந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.