ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு நடனம் ஆடும் இலங்கை ஆட்டோ டிரைவர்..வைரல் வீடியோ

Viral Video
By Thahir Jun 17, 2022 11:20 PM GMT
Report

இலங்கையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசைபுயல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.

இவரது பாடல்கள் என்றால் மயங்காதவர்களே இல்லை. ஏ.ஆர் ரகுமானின் பாடலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான்  பாடலுக்கு நடனம் ஆடும் இலங்கை ஆட்டோ டிரைவர்..வைரல் வீடியோ | Sri Lankan Auto Driver Dancing For Ar Rahman Song

மெல்லிசை முதல் கேட்போரை குத்தாட்டம் போட வைக்கும் வகையில் ஏ.ஆர் ரகுமான் எக்கச்சக்கமான பாடல்களை கொடுத்துள்ளார்.

வைரல் வீடியோ 

இந்த நிலையில் சற்று வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏ.ஆர் ரகுமானின் பாடலை கேட்டு சாலையிலேயே அசத்தலாக நடனம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இலங்கையில் பெட்ரோல் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்காரர் ஒருவர் ஏ.ஆர்.ரகுமானின் காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்காலா முக்காலா பாடலுக்கு செம ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடியுள்ளார். 

குடும்பத்தின் முதல் வாரிசு..கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா..!