எளிமையான முறையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம் - வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்

By Nandhini May 06, 2022 05:43 AM GMT
Report

புகழ் பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திர இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் வலம் வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார்.

இதனையடுத்து, பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்று ரசிகளால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவர் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்லம் டாக் மில்லியனியர்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவர் ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமீன் என்ற மகனும், ரஹீமா, கதீஜா என்கிற மகள்களும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளான கதீஜாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ரியாசுதீன் ஷேக் முகமது என்கிற சவுண்ட் இஞ்ஜினியரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமணம் நேற்று எளிமையான முறையில் நடந்தது. இத்திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கதிஜா, ‘என் வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த நாள் இதுதான்’ என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கும், மருமகனுக்கும் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எளிமையான முறையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்  - வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள் | A R Rahman

எளிமையான முறையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்  - வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள் | A R Rahman

எளிமையான முறையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்  - வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள் | A R Rahman