ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாக தாக்கும் பாதுகாப்புப் படையினர் - அதிர்ச்சி வீடியோ வைரல்
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
நேற்று கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.
அதிர்ச்சி வீடியோ வைரல்
நேற்று ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த போது அவர்களை பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கும்படி அமைந்துள்ளது.
More video footages have emerged of Sri Lanka security forces brutally attacking protesters moments before protesters entered the President's house yesterday pic.twitter.com/f6fSyEwc9X
— NewsWire ?? (@NewsWireLK) July 10, 2022
3 முறை கருக்கலைப்பு - திடீர் பல்டி அடித்த நடிகை சாந்தினி!