அன்று பிலிப்பைன்ஸ்... இன்று இலங்கை... - ஜனாதிபதிகளை துரத்திய மக்கள் - வைரலாகும் புகைப்படம்
இலங்கை பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து, இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.
இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்
கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.
அன்று பிலிப்பைன்ஸ்... இன்று இலங்கை...
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்பட பதிவில், அன்று 1986 பிலிப்பைன்ஸ். இன்று இலங்கை 2022. ஜனாதிபதி மாளிகைகளில் இருந்து ஜனாதிபதிகளை மக்கள் துரத்துவது கிடையாது. ஆனால், துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் அநீதி செய்தால், மக்கள் ஜனாதிபதிகளை வெளியேற்றுகிறார்கள். எந்த ஒரு வரலாற்றுத் திருத்தமும் அதை மாற்றாது என்று பதியப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Philippines, 1986. Sri Lanka, 2022. People don’t chase presidents from presidential palaces because they’ve been made to. People oust presidents because they’ve had enough of abuse, corruption, and injustice. No amount of historical revision will change that. pic.twitter.com/vNv48yzMhL
— Gerry Cacanindin (@GerryCacanindin) July 12, 2022
இந்தியாவில் இன்றிரவு வானில் தோன்றும் சூப்பர் மூன்... - மக்கள் கண்டுகளிக்கலாம்