தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா!

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Sumathi Jul 12, 2022 04:23 AM GMT
Report

நாட்டின் பொருளாதாரத்தை சுக்கு நூறாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போர் படையாக திரண்டுள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே

இவர்களிடம் தப்பிக்க வீட்டை விட்டு இரவோடு இரவாக கோத்தபய தப்பிச் சென்றார். இந்த நிலையில் அதிபர் பதவியை வரும் புதன் கிழமை (ஜூலை 13ஆம் தேதி) ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

sri lanka

இலங்கையின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ந்து மக்கள் பணவீக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல் டீசல் கிடைக்காமல், உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, வேலை வாய்ப்புகளை இழந்து மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை பொருளாதாரம்

வறுமைக் கோட்டில் இருக்கும் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். பண உதவிக்கு இந்தியா, சீனா, சர்வதேச நிதி ஆணையம் ஆகியவற்றை எதிர்பார்த்து இருக்கிறது இலங்கை.

gotabaya-rajapaksa

போராட்டக்காரர்களின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் தற்போது ராஜினாமா செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கோத்தபய வீட்டிற்குள் போராட்டக்காரர்கள் ராணுவ மற்றும் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நுழைந்தனர்.

நிதி உதவி

அவரது வீட்டிற்குள் நுழைந்த மக்கள் சமையலறையில் சமைத்து சாப்பிட்டு, அவரது படுக்கையில் படுத்து போஸ் கொடுத்து, கூட்டம் நடத்தும் அறையில் அதிபர் போன்று பேசி புகைப்படம் எடுத்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

அதிபரின் நீச்சல் குளத்தில் குளித்து குதூகலித்தனர். அன்று இரவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கும் தீ வைத்தனர். இதற்கு முன்னதாக பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்து இருந்தும், மக்களின் வெறி அடங்கவில்லை.

 வறுமை

அவரது வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சர்வதேச நிதி ஆணையத்தில் இருந்து அல்லது உலக வங்கியில் இருந்து இலங்கைக்கு நிதி உதவி வழங்கினால் கடினமான கட்டுப்பாடுகளுடன்தான் வழங்கப்படும் என்று

வாஷிங்டனில் இருக்கும் உலக வளர்ச்சி மையத்தின் பொருளாதார வல்லுநர் அணித் முகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், கடல் வழி போக்குவரத்துக்கு முக்கிய மையமாக இலங்கை இருந்து வருகிறது.

ராஜினாமா 

அப்படி ஒரு நாடு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மீட்க வேண்டியது அவசியம் என்பதையும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது பத்தில் ஒன்பது சதவீத குடும்பத்தினர் வறுமை காரணமாக உணவு உண்பதை தவிர்த்து வருகின்றனர்.

30 லட்சம் மக்கள் மனிதநேய அமைப்புகளால் வழங்கப்படும் உணவுகளை நம்பி உள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் ராஜினாமா செய்ததால் மட்டும், பொருளாதார சிக்கல்கள் முடிந்துவிடவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பிரதமர் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். யார் அடுத்த பிரதமர், அதிபர் என்பதும் விரைவில் தெரிய வரும். 

தாயுடன் லிவ்-வின் ரிலேஷன்சிப்...மகளை கர்ப்பமாகிய இளைஞர்!