இந்த நாட்டிற்கு செல்ல இனி விசா தேவையில்லை - அரசு அறிவிப்பு

Sri Lanka India Tourist Visa
By Sumathi Oct 01, 2024 06:54 AM GMT
Report

 இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை

ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது அவசியமான ஒன்று. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம்.

sri lanka

ஆனால், கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்நிலையில், இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு தீபாவளிப் பரிசு; தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை - கனவு நினைவாச்சு!

இந்தியர்களுக்கு தீபாவளிப் பரிசு; தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை - கனவு நினைவாச்சு!


விசா தேவையில்லை

இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிற்கு செல்ல இனி விசா தேவையில்லை - அரசு அறிவிப்பு | Sri Lanka Does Not Require A Visa To 35 Countries

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாதலம். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் போன்று காண ஏராளமான இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.