இந்தியா - மாலத்தீவு விவகாரம்; 6 மாதங்களாக கொண்டாட்டத்தில் இலங்கை!
இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை
இந்தியா - மாலத்தீவுகள் இடையிலான மோதலால், இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை குறைத்துவிட்டனர். மாலத்தீவின் பொருளாதாரம், அதன் சுற்றுலாவை அடித்தளமாக கொண்டுதான் விளங்கி வருகிறது.
2021ஆம் ஆண்டில் 2.9 லட்சம் இந்தியர்களும், 2022ஆம் ஆண்டில் 2.4 லட்சம் இந்தியர்களும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் சுமார் 23% பேர் இந்தியர்கள்தான்.
சுற்றுலாத்துறை
ஆனால், மாலத்தீவை இந்தியர்கள் புறக்கணித்ததால், இலங்கை வளர்ச்சி அடைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு 1.23 லட்சம் இந்தியர்கள் சென்று வந்தநிலையில், 2023ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் சென்று வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அப்படியே இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில், நடப்பாண்டில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் தங்களது நாட்டிற்கு சுற்றுலா வருவார்கள்.இந்தியா - மாலத்தீவுகள் விவகாரத்தால் தங்களது நாடு மிகப்பெரும் பலன் அடைந்துள்ளது.
இதனால், தங்களது நாடு பொருளாதார அளவிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.