இனி விசா வேண்டாம்.. இந்த நாட்டிற்கெல்லாம் அனுமதி அளித்த பிரிட்டன்!
பிரிட்டன் தனது நாட்டிற்குள் விசா இல்லாமல் வருவதற்கு அனுமதி அளித்துள்ளது.
பிரிட்டன்
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்க்கு பாஸ்போர்ட், விமான பயணச்சீட்டு மற்றும் விசா ஆகியவை மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நினைப்பவர்கள் பல ஆயிரம், பல லட்சம் செலவு செய்து பயணம் செய்கின்றனர். சுற்றுலா, கல்வி, ஆன்மீக யாத்திரை, வேலை போன்றவற்றிற்காக விசா தரப்படுகிறது.
விசா வேண்டாம்..
சுற்றுலா துறை மற்றும் வணிக நோக்கத்தோடு வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டிற்குள் விசா இன்றி அணுமதிக்கும் யுக்தியை சில நாடுகள் கடைப்பிடிக்கின்றன. தற்போது சில நாடுகள் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துக்கொண்டு அந்நாட்டு மக்களை தன் நாட்டுக்குள் விசா இன்றி அனுமதிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு இந்தியர்களுக்கு மலேசியாவிற்குள் செல்ல விசா தேவை இல்லை என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது, பிரிட்டன் அரசு தனது நாட்டிற்குள் 6 அரபு நாடுகளை (ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன்) சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் பிப்.22க்கு மேல் வரலாம்.
ஆனால் விசாவிற்கு பதில் ETA எனப்படும் மின்னனு பயண அனுமதியை வாங்கி வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரபு நாடான கத்தாருக்கு பிரிட்டன் 2023 நவம்பர் 13-ல் ETA முறையினை தந்தது குறிப்பிடத்தக்கது.