கப் ஜெயிச்சா தான் கொண்டாட்டம் - ஆர்சிபி வீரர்களை அவமானப்படுத்திய சன்ரைசர்ஸ்!
வெற்றி குறித்து ஷாபாஸ் அஹ்மத் பேசியுள்ளார்.
ஷாபாஸ் அஹ்மத்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்து ஆறு போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது.
வெற்றி கொண்டாட்டம்
அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதை அந்த அணியின் வீரர்களும், ரசிகர்களும் கோப்பையை வென்றது போல கொண்டாடினர். ஆனால், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன் பின் பேசிய ஷாபாஸ் அஹ்மத், தாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடப் போவதில்லை.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னரே கொண்டாடுவோம் எனத் தெரிவித்துள்ளார். இது அவர் ஆர்சிபியை மறைமுகமாக தாக்கியதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.