'நீ ஒரு ஜோக்கர்'.. ராயுடுவை விளாசிய முன்னாள் வீரர் - நேரலையில் பகீர் சம்பவம்!

Kolkata Knight Riders Sunrisers Hyderabad Cricket Ambati Rayudu IPL 2024
By Jiyath May 28, 2024 10:46 AM GMT
Report

இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவை 'ஜோக்கர்' என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.  

இறுதிப் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து 114 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து மின்னல் வேக வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக அந்த அணி (2012, 2014, 2024) ஐபிஎல் கோப்பை வென்றது.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக பேசினார். மேலும், ஆரஞ்ச் நிறத்தினாலான கோட் ஒன்றையும் அணிந்து கொண்டார்.

SRH படு தோல்வி: கதறி அழுத காவ்யா மாறன் - ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்ன விஷயங்கள்..?

SRH படு தோல்வி: கதறி அழுத காவ்யா மாறன் - ட்ரெஸ்ஸிங் ரூமில் சொன்ன விஷயங்கள்..?

ஜோக்கர்

ஆனால் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதும் அவர் ஆரஞ்ச் நிற கோட்டை மாற்றவிட்டு நீல நிறத்தினாலான கோட்டை அணிந்து நேரலை விவாதத்தில் பங்கேற்றார். இதில் முன்னாள் வீரர்கள் பீட்டர்சன், மேத்யூ ஹெய்டன், அம்பத்தி ராயுடு மற்றும் தொகுப்பாளர் மயந்தி லாங்கர் ஆகியோர் விவாதித்து கொண்டிருந்தனர்.

அப்போது, "அம்பத்தி ராயுடு அவரின் கோட் நிறத்தை ஆரஞ்சிலிருந்து நீலத்திற்கு மாற்றிவிட்டார் என மயந்தி லாங்கர் கூறினார். இதனால் உற்சாகமான பீட்டர்சன், ராயுடுவை பார்த்து "நான் கடைசி வரை எனது பர்பிள் நிற கோட்-ஐ மாற்றவில்லை.

நீங்கள் ஒரு ஜோக்கர். கடைசி வரை ஜோக்கராக தான் இருப்பீர்கள்" என்று கிண்டல் செய்தார். அதற்கு அம்பத்தி ராயுடு, "நான் இரு அணிகளையும் ஆதரிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நல்ல கிரிக்கெட்டை ஆதரிக்கிறேன்" என்று சமாளித்தார்.