மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது - நடந்தது என்ன?

Kerala Actors Accident Manjummel Boys
By Karthikraja Oct 16, 2024 11:30 AM GMT
Report

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநாத் பாஸி

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநாத் பாஸி. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானார்.

sreenath bhasi

இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். யூட்யூப் சேனல் தொகுப்பாளினியிடம் தவறாக நடந்து கொண்டது, படப்பிடிப்பு தளத்திற்கு போதையில் வருவது என இவர் மேல் குற்றச்சாட்டுகள் உண்டு. 

போதை பொருள் பார்ட்டியில் தமிழ் பட நடிகை, மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் ? போலீசார் தீவிர விசாரணை

போதை பொருள் பார்ட்டியில் தமிழ் பட நடிகை, மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் ? போலீசார் தீவிர விசாரணை

கார் விபத்தில் கைது

கடந்த மாதம் போதை கும்பல் தலைவரான ஓம்பிரகாஷிடம் போதைப் பொருள் சம்பந்தமாகப் பேசியதாக காவல் துறை வெளியிட்ட ரிமாண்ட் அறிக்கையில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. 

ஸ்ரீநாத் பாஸி

தற்போது கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்ற போது, பைக்கில் வந்துகொண்டிருந்த முகமது பஹீம் என்பவர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த முகமது பஹீம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், ஸ்ரீநாத் பாஸியை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.