போதை பொருள் பார்ட்டியில் தமிழ் பட நடிகை, மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் ? போலீசார் தீவிர விசாரணை

Kerala Actors Tamil Actress Manjummel Boys
By Karthikraja Oct 08, 2024 01:30 PM GMT
Report

போதை பொருள் பார்ட்டியில் தமிழ் பட நடிகை கலந்து கொண்டதாக காவல் துறை சந்தேகிக்கிறது.

போதைப்பொருள் தாதா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த போதைப்பொருள் தாதாவான ஓம்பிரகாஷை கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அக்டோபர் 6 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

om prakash arrest in kerala

மேலும் இவரிடம் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸார் அங்கு செல்வதற்கு முன், போதைப் பொருள் பார்ட்டி நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்ரீநாத் பாஸி

தொடர்ந்து அவரது செல்போன் மற்றும் ஹோட்டல் சிசிடிவிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதில் நடிகர் நடிகைகள் உட்பட 20 க்கு மேற்பட்டோர் ஓம்பிரகாஷை அவரது அறையில் சந்தித்துள்ளனர். 

sreenath bhasi

போலீஸாரின் அறிக்கையில், அங்கு சென்றதாக நடிகர் ஸ்ரீநாத் பாஸி, நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருவரிடமும் காவல்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

prayaga martin

நடிகர் ஸ்ரீநாத் பாஸி மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமான பிரயாகா மார்ட்டின், தமிழில் பிசாசு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் எனக்கு ஓம் பிரகாஷ் என்றால் யாரென்றே தெரியாது என பிரயாகா மார்ட்டின் கூறியுள்ளார்.