2025 ஐபிஎல்: KKR இல்லை என்றால் வேறு எந்த அணிக்கு செல்வீர்கள்? ரிங்கு சிங் சொன்ன பதில்
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டவில்லை என்றால் வேறு எந்த அணிக்கு செல்வீர்கள்?” என்ற கேள்வி கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடம் முன்வைக்கப்பட்டது.
2025 ஐபிஎல்
2025 ஆண்டுக்கான ஐபிஎல்'மெகா ஏலம்' இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) குழுவின் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கான தேதி மற்றும் இடம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில் , 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டவில்லை என்றால் வேறு எந்த அணிக்கு செல்வீர்கள்?” என்ற கேள்விக்கு ரிங்கு சிங் அளித்துள்ள பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் அடுத்த பினிசிங் வீரராக பார்க்கப்படும் ரிங்கு சிங் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக யஷ் தயாள் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி அனைவரது கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் ரிங்கு சிங் . இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார்.
மெகா ஏலம்
கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் இடம் பெற்று வந்த ரிங்கு சிங், 2024 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. அடுத்து உலகக் கோப்பை தொடரில் மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்தது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டவில்லை என்றால் வேறு எந்த அணிக்கு செல்வீர்கள்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு,'' ஆர்சிபி-தான். விராட் கோலி அங்கு இருப்பதால் ஆர்சிபிக்காக விளையாட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசிய ரிங்கு சிங், “SKY ஒரு நல்ல கேப்டன் மற்றும் எப்போதும் அமைதியாக இருப்பார். அதிகம் பேசமாட்டார்” என்றுள்ளார்.