ஏற்கனவே முடிவு பண்ண ஐபிஎல் ஃபைனல் ஸ்கோர் - சர்ச்சையில் பிசிசிஐ!
ஐபிஎல் பைனல் ஏற்கனவே திட்டமிடப்பட்டு போட்டி நடத்தப்பட்டதா? என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.
ஐபிஎல் பைனல்
2024 மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
2024 ஐபிஎல் தொடரின் ஃபைனலில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதேபோல ஆடவர் ஐபிஎல் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து மகளிர் ஐபிஎல்-இல் சேஸிங் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
வெடிக்கும் சர்ச்சை
அதேபோல இங்கே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இப்படி மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், ஆடவர் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளுமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும், எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும், எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.