அறுவை சிகிச்சை.. மருத்துவர்கள் மறந்துவைத்த பஞ்சு- இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

Uttar Pradesh India Crime Death
By Swetha Dec 10, 2024 02:30 PM GMT
Report

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பெண்ணின் உடலில் பஞ்சை மறந்து வைத்ததில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்கள் 

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பெட் மாவட்டத்தை சேர்ந்தவர் கீலாவதி சங்கர்(34). இவருக்கு கடந்த ஜூலை மாதம் கருப்பையில் ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் தேவிபுரா கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை.. மருத்துவர்கள் மறந்துவைத்த பஞ்சு- இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! | Sponge That Left Inside During Operation Women Die

அவரை சோதனை செய்த மருத்துவர் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யும்படி பெண்ணிடம் வலியுறுத்தினார். அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சையும் ஆஷா கங்வா என்ற மருத்துவர் செய்துள்ளார். பின்னர், ருத்துவமனையிலிருந்து அதே ஜூலை மாத இறுதியில் ஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மூக்கடைப்பால் அவதி ; கொத்து கொத்தா குடி இருந்த புழுக்கள் - மிரண்டுபோன மருத்துவர்கள்!

மூக்கடைப்பால் அவதி ; கொத்து கொத்தா குடி இருந்த புழுக்கள் - மிரண்டுபோன மருத்துவர்கள்!

அறுவை சிகிச்சை.. 

எனினும் அந்த பெண்ணிற்கு அடிவயிற்றில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால், கீலாவதியின் கணவர் உமா சங்கர்ரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இவரை அழைத்து சென்று சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது

அறுவை சிகிச்சை.. மருத்துவர்கள் மறந்துவைத்த பஞ்சு- இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! | Sponge That Left Inside During Operation Women Die

வயிற்றுக்குள் அறுவைச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்பான்ச் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உடல் உள் உறுப்புகளில் வீக்கமும், சீழ்களும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

இருந்தும் இரண்டாவது அறுவை சிகிச்சையின்போது லாவதி உயிரிழந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், “ சிஎம் ஓ அறிக்கை வந்தப்பிறகுதான் இதுத்தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.