மூக்கடைப்பால் அவதி ; கொத்து கொத்தா குடி இருந்த புழுக்கள் - மிரண்டுபோன மருத்துவர்கள்!

Thailand
By Swetha May 08, 2024 12:26 PM GMT
Report

பெண்ணின் முக்கில் குடியிருந்த 100 கணக்கான புழுக்களை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மூக்கடைப்பு

தாய்லாந்து வடக்கு பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அவரது மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வழிய தொடங்கியுள்ளது.

மூக்கடைப்பால் அவதி ; கொத்து கொத்தா குடி இருந்த புழுக்கள் - மிரண்டுபோன மருத்துவர்கள்! | Woman With Stuffed Nose Finds Hundreds Of Maggots

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பம் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர் ஒருவர் பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டறிந்தார்.

மூக்கில் ரத்த கசிவு; குடியிருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள் - ஷாக் ஆன மருத்துவர்கள்!

மூக்கில் ரத்த கசிவு; குடியிருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள் - ஷாக் ஆன மருத்துவர்கள்!

புழுக்கள் 

இதனையடுத்து, சோதனையில் மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை அகற்றினர். சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மூக்கடைப்பால் அவதி ; கொத்து கொத்தா குடி இருந்த புழுக்கள் - மிரண்டுபோன மருத்துவர்கள்! | Woman With Stuffed Nose Finds Hundreds Of Maggots

மேலும், ஒருவேளை பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், புழுக்கள் கண்கள் அல்லது மூளைக்கு இடம்பெயர்ந்திருக்கக்கூடும். அது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். குறிப்பாக உயிரிழப்பு கூட நேர்ந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.