ஹோட்டல் உணவில் எச்சில் துப்பும் கொடூரம் - உ.பி அரசு அதிரடி

Uttar Pradesh Uttarakhand Yogi Adityanath Viral Photos Crime
By Sumathi Oct 18, 2024 07:30 AM GMT
Report

உணவில் எச்சில் துப்புதல் விவகாரம் தொடர்பாக அரசு 2 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

எச்சில் துப்புதல் 

உத்தரகண்ட், முசோரிக்கு வந்த சுற்றுலா பயணியருக்கு பழச்சாறில் எச்சில் துப்பி பரிமாறிய இரு ஹோட்டல் ஊழியர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

spitting in foods

அதேபோன்று, டேராடூனைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், ரொட்டிக்கு மாவு பிசையும் போது, அதில் எச்சில் துப்பிய சம்பவம் அம்பலமானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முத்த காய்ச்சல் பற்றி தெரியுமா? பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முத்த காய்ச்சல் பற்றி தெரியுமா? பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!


அரசு அதிரடி

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு, இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. தவறான மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் எச்சில் துப்புதல் தடைச் சட்டம் 2024 மற்றும் உ.பி., உணவு மாசுபாடு (நுகர்வோர் அறியும் உரிமை) அவசரச் சட்டம் 2024 ஆகியவை

yogi adityanath

உணவில் எச்சில் துப்புவது அல்லது பிற சுகாதாரமற்ற நடைமுறைகள் உட்பட உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடுமையான தண்டனைகளை விதிக்க வகை செய்யும்.

மேலும், உணவில் கலப்படம் செய்தது உறுதியானால், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 274 மற்றும் உத்தரகாண்ட் காவல் சட்டம் பிரிவு 81 இன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டப்பிரிவில் கைதானால் 6 மாதம் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் டிஜிபி தெரிவித்துள்ளார்.