ஆடையின்றி நிர்வாணமாக வாழும் கிராம மக்கள்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்- காரணம் என்ன?
பிரிட்டனில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் நிர்வாணமாக வசிப்பது ஏன் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டனில்
உலகில் பல விசித்திரமான சம்பவங்கள் காணக்கூடிய பல இடங்கள் உள்ளன. வினோதமான விஷயங்களைப் பற்றி இணையத்தில் அடிக்கடி செய்திகள் வருவதுண்டு. அப்படி பிரிட்டனில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் ஆடையின்றி நிர்வாணமாக வசித்து வருவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டனில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் ஸ்பைல்ப்லாட்ஸ் என்ற கிராமம் உள்ளது. இது மிகவும் பழமையான கிராமம் ஒன்றாகும். இங்கு நல்ல வீடுகள் மட்டுமின்றி, பிரமாண்டமான நீச்சல் குளம், மக்கள் குடிப்பதற்கு பீர் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளுக்குப் பஞ்சமில்லை. இங்கு மக்கள் பல ஆண்டுகளாக ஆடை இல்லாமல் நிர்வாணமாக வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஏழைகள் என்பதோ, உடுக்க உடைகள் இல்லை என்பதோ அல்ல.
நிர்வாணமாக வசிப்பது ஏன்?
ஆனால் அங்குள்ள பழங்கால மரபு மற்றும் நம்பிக்கைகளைப் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.ஸ்பைல்ப்லாட்ஸ் கிராமத்தில் இயற்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் ஆடை இல்லாமல் வசித்து வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் ஆடைகள் அணியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் யார் வந்தாலும் ஆடை இன்றி இருக்கலாம். அவர்களுக்கான கட்டுப்பாடுகள் எனச் சிலவற்றை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தக் கிராமத்தைப் பற்றிப் பல ஆவணப்படங்களையும் குறும்படங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.