ராஜினாமா கடிதத்தை அனுப்பிய வளர்ப்புப் பூனை- இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
வளர்ப்புப் பூனையால் இளம் பெண் ஒருவர் வேலை இழந்த சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீனா
சீனாவில் உள்ள சோங்கிங்கில் மாகாணத்தில் வசித்து வருபவர் 25 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் செல்ல பிராணியாக 9 பூனைகளை வளர்த்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பூனைகளைக் கவனித்துக் கொள்ளத் தனது வேலையை விட முடிவு செய்து தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்துள்ளார். அதே சமயம் வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து கடிதத்தை அனுப்பாமலேயே இருந்துள்ளார்.
வளர்ப்புப் பூனை
ஆனால் பூனை தவறுதலாக ENTER பட்டனை அழுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது வீட்டில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு விளக்கமளிக்க அலுவலகத்தைத் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவரது முதலாளி அதை ஏற்கவில்லை.
மேலும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது . இறுதியில் அவர் வேலையையும், வருடாந்திர ஊக்கத்தொகையையும் இழந்துள்ளார்.தற்பொழுது அந்த இளம்பெண் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கதை சீனாவில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.