நடுவானில் தீப்பிடித்த விமானம் : திடுக்கிடும் நிமிடங்கள்!
விமானத்தில் பறவை மோதியதன் காரணமாக என்ஜின் தீ பிடித்தது என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட்
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் பணியாளர்கள் உட்பட 185 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், விமானம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென பறவை ஒன்று விமானத்தின் இடது பக்க இயந்திரத்தில் மோதிய நிலையில்,
185 பேர் பயணம்
இதனால் அந்த இயந்திரத்தில் திடீரென தீப்பற்றியது. இயந்திரத்தில் தீப்பற்றியதை அறிந்ததும் சுதாரித்துக் கொண்ட விமானிகள் உடனடியாக பாட்னா விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்து
#WATCH Delhi bound SpiceJet flight returns to Patna airport after reporting technical glitch which prompted fire in the aircraft; All passengers safely rescued pic.twitter.com/Vvsvq5yeVJ
— ANI (@ANI) June 19, 2022
மீண்டும் விமானத்தை பாட்னா விமான நிலையத்தில் தரையிரக்க அனுமதி கோரினர். விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கியதை அடுத்து மீண்டும் அந்த விமான அவசர அவசரமாக பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பத்திரமாக மீட்பு
இந்நிலையில், சம்பவ இடத்தில் தயாராக இருந்த விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக விமான இயந்திரத்தில் எரிந்த தீயனை அணைத்தனர். மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம், தீ விபத்து காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படப்பிடிப்புக்கு நடுவே வெளிநாடு பறந்த நயன்-விக்கி.. ஹனிமூன் ட்ரிப்பா?