பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து சிக்கலில் மாட்டிய ஜோடி!
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கால் பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. சில திருமணங்கள் கோவில்களில் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த ராகேஷ் – தர்ஷனா என்னும் தம்பதி, பெங்களூரு – மதுரை செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை 2 மணி நேரம் வாடகை எடுத்துள்ளது.
அந்த விமானத்தில் தங்களுக்கு நெருக்கமான உரிமையாளர்கள் 161 பேருடன் திருமணம் செய்து கொண்டனர். பறக்கும் விமானத்திலேயே தாலிக்கட்டி ரிஷப்ஷனும் நடத்தி இருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து விமான நிறுவனம் தெரிவிக்கையில், அவர்கள் திருமணம் நடத்தப்போவதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளது.
கொரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் ஆணையிட்டதுடன், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அதிகாரிகளிடம் விளக்கமும் கேட்டிருக்கிறது.