எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை - ஹாங்காங், சிங்கப்பூரை தொடர்ந்து இங்கேயுமா?
நேபாளத்திலும் எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட், எம்.டி.ஹெச்
இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து, அந்த மசாலாக்கள் திரும்பப்பெறப்பட்டன. தற்போது, இந்த மசாலாக்களின் புற்றுநோய் பின்புலம் குறித்து அமெரிக்காவும், தனது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) வாயிலாக ஆராயவுள்ளது.
நேபாளத்தில் தடை
தொடர்ந்து, இந்திய மசாலா வாரியம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஏற்றுமதி மற்றும் விற்பனைகள் தொடர்பான தரவைக் கோரியுள்ளது.
இந்நிலையில் நேபாள அரசு, எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில் சோதனை நடத்தி வருகிறோம். அதன் இறுதி அறிக்கை வரும் வரை தடை தொடரும். ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன.
அதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு அளவு அதிகமாக இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.