பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து; ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்!
மீன்கறி மசாலாவில் பூச்சி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மசாலாவில் பூச்சி மருந்து
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான எவரெஸ்ட் மசாலாக்கள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் சாப்பாடு செய்ய உபயோகிக்கும் பெரும்பாலான பிரபல உணவு பொருட்களில் கலப்படம் இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
அப்படியாக இந்த பிரபல மசாலா பாக்கெட்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலவை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் இந்த எவரெஸ்ட் மீன்கறி மசாலா தூளைச் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது, ஹாங்காங்கில் உள்ள உணவுப் பாதுகாப்பு நிலையம் அந்த பாக்கெட்டுகளை ஆய்வு செய்து பார்த்தது.
இறக்குமதி செய்யப்பட்ட மீன்கறி மசாலாவின் பொட்டலங்கள் 50 கிராம் எடைகொண்டவை எனவும் அவை அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு காலாவதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த மசாலா தூளில் Ethylene oxide எனும் ரசாயன கலவை இருந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.
திடுக்கிடும் தகவல்
பாதிக்கப்பட்ட அவை அனைத்திலும் ரசாயனம் உள்ளது, Ethylene oxide ரசாயனம் குறைந்த அளவில் இருக்கும் உணவைச் சாப்பிடுவதால் உடனடி அபாயம் ஏற்படாது என்றாலும் நீண்ட காலம் அதனைச் சாப்பிடுவது உடம்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று உணவு அமைப்புகள் கூறுகின்றனர்.
இதனால் இந்த மீன் கரி மசாலாவை வாங்கியவர்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும், அதை உட்கொண்டவர்கள் தங்கள் உடல்நலம் மீது அக்கறை கருதி உடனே மருத்துவர்களை நாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்த Sp Muthiah & Sons நிறுவனத்திடம் அந்த உணவுப் பொருளை மீட்டுக்கொள்ளும்படி உணவு அதிகாரிகள் உத்தரவு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மசாலா நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.